Local

சு.கவில் புதிய பதவிநிலை! இவ்வாரம் கூடுகிறது மத்தியக்குழு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.

புதிய அரசியல் கூட்டணி, கட்சி மறுசீரமைப்பு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதனபோது கலந்துரையாடப்படவுள்ளன.

அத்துடன்,  சுதந்திரக்கட்சிக்கு பதில் பொதுச்செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அண்மையில்  மாரடைப்பு ஏற்பட்டது. வைத்தியசாலையில் கிசிச்சைப்பெற்றுவரும்  அவரை ஓரிரு மாதங்களுக்கு ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனவே,  செயற்பாட்டு அரசியலுக்கு சிறிதுகாலம் தயாசிறி எம்.பி. விடுப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்காரணமாகவே கட்சி நடவடிக்கைகளைக் கையாள்வதற்காக பதில் பொதுச்செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு  ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading