Local

ஊழல் செய்தோர் அமைச்சரவையில்! – மஹிந்த அணி கூறுகின்றது

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோர், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராகத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவையில் நேர்மையற்ற நபர்களே பட்டியல் படுத்தப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்ட முடியும்.

இவர்கள் அனைவருக்கும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுள்ளனரா என்பதை அறியாமலேயே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தொடர்பான பட்டியலை ஒருமுறை கூட பரிசீலிக்காது ஜனாதிபதி அவர்களுக்கான நியமனங்கள் வழங்கியுள்ளார்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading