Lead NewsLocal

புதிய அரசமைப்பினால் நாடு பிளவுபடமாட்டாது! – பிரதமர் ரணில் உறுதியளிப்பு

“நாட்டைப் பிளவுபடுத்துவதற்கோ அல்லது பெளத்த மதத்துக்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ புதிய அரசமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசமைப்புப் பேரவை பிரதி சபாநாயகர் ஆ னந்த குமாரசிறி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடியது.

இதன்போது புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேரவையில் முன்வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரே நாட்டுக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்குதல், தேர்தல் முறைமை, நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையை நீக்குதல் போன்றன தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டே புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading