LocalUp Country

ஏழு வருடங்களாக மாமாவால் வன்புணர்ந்து சீரழிக்கப்பட்ட சிறுமியை மீட்டது பொலிஸ்!

மாமாவால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த 14 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் எனப் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை உயிரிழந்ததையடுத்து தாய் வௌிநாடு சென்றதனால் தனது பாட்டியுடன் குறித்த சிறுமி வசித்து வந்துள்ளார்.

2011ஆம் ஆண்டு முதல் சந்தேகநபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்தார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.

37 வயதுடைய குறித்த சந்தேகநபர் கொழும்பில் தொழில் செய்து வருகின்றார். இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தேகநபர் வீட்டுக்கு வரவுள்ளதை அறிந்த சிறுமி தங்கையுடன் வனப் பகுதிக்குச் சென்று ஒழிந்துகொண்டுள்ளார்

இதன்போது பொலிஸ் அவசர இலக்கத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த சிறுமியும் அவரது தங்கையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading