Local

டிரக்டர் சாரதிகளை ஓட ஓட கடித்துக் குதறிய சிறுத்தை! – ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்

குமண தேசிய வனத்தில் வைத்து சிறுத்தை கடித்துக் குதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செல்வத்துரை ரவிச்சந்திரன் எனும் குமண தேசிய வனத்தில் டிரக்டர் ஓட்டும் சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு சாரதி அம்பாறை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிறுத்தையின் தப்பித்துக்கொள்ள முயன்றபோதும், குறித்த சிறுத்தை அவர்கள் இருவரையும் ஓட ஓடக் கடித்துக் குதறியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading