Local

திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவரை விசாரணைக்கு அழைத்தது ரி.ஐ.டி.!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம், நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரான, முன்னாள் போராளி, கந்தையா பிரபாகரன் என்பவரையே பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் உள்ள இவரது வீட்டுக்கு நேற்றுச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், எதிர்வரும் 29ஆம் திகதி, கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணையைக் கொடுத்துள்ளனர்.

எனினும், இந்த அழைப்பாணையில் காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading