ரூ. 1000 வேண்டும் ! கொட்டகலையிலும், ஹட்டனிலும் மக்கள் புரட்சி!!
அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொட்டகலையில் இன்று (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக அணிதிரண்டு உரிமைக்குரல் எழுப்பினர்.
” அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம். கூட்டு ஒப்பந்த முறைமையை இரத்து செய். இல்லையேல், சந்தாவை நிறுத்திவிடுவோம்.” என்று கோஷங்களை எழுப்பினர்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஆறுமுகன் தொண்டமான், வடிவேல் சுரேஷ் ஆகியோர் தொழிலாளர்களை ஏமாற்றி விட்டனர் என்றும் விமசனம் வெளியிட்டனர்.
அதேவேளை, ஹட்டன் மல்லியப்பு சந்தியிலும் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இது நடைபெற்றது.
க.கிசாந்தன் –



