Lead NewsLocal

‘ராஜ்பக்ச குடும்பம்’ எமக்கு சவால் அல்ல! – வெற்றி உறுதியென ஐ.தே.க. சூளுரை

“ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச குடும்பம் எமக்கு சவால் அல்ல. அக்குடும்பத்தில் இருந்து கோட்டாபயவோ, பஸிலோ அல்லது சமலோ களமிறங்கினால் நாம் தோற்கடிப்போம். இனிமேல் நடக்கும் எந்தத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதி.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சி பல கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய முன்னணியாகத் தற்போது திகழ்கின்றது. இனிமேல் இந்தக் கூட்டணி ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ எம்மை வீழ்த்தலாம் என்று கனவிலும் கூட இனிமேல் நினைக்கக்கூடாது.

எங்கள் பலத்தை எவராலும் அசைக்க முடியாது. எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்கவும் முடியாது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading