Local

பட்டுப்பாதை உறவை பலப்படுத்துகிறது கொழும்பு! சீனா பறக்கிறார் மலிக்

சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பான பேச்சுக்களை மீண்டும் இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

அடுத்த மாதம் அமைச்சர்கள் மட்டத்திலான இந்தப் பேச்சுக்கள் தொடங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அடுத்தமாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பாக,  அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலை நடத்தவுள்ளார்.

கூடிய விரைவில் இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வது குறித்து சீன அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தாம் பேசவுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading