LocalNorth

சாவகச்சேரியில் இளைஞர் மாயம்! – பொலிஸார் தீவிர விசாரணை

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய இளைஞரைக் காணவில்லை எனப் பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த மனோரஞ்சன் சஜிந்தன் (சயந்தன்) என்ற இளைஞரே காணாமல்போயுள்ளார்.

இந்த இளைஞர் மறவன்புலவுப் பகுதியில் தற்காலிகமாகத் தங்கி இருந்து உணவகத்துக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading