Local

மேல் மாகாணத்திலும் நாளை முதல் ஆளுநர் ஆட்சி!

மேல் மாகாண சபையின் பதவிக்காலம் நாளை 21 ஆம்  திகதியும், ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் செப்டம்பரிலும் நிறைவடைகின்றன.

வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய ஆகிய மாகாண சபைகளின் பதவிகாலம் ஏற்கனவே நிறைவடைந்திருந்த நிலையில்,  கடந்த 10 ஆம் திகதி தென்மாகாண சபையின் பதவி காலமும் நிறைவடைந்தது.

எனவே, ஏழு மாகாண சபைகளின் நிர்வாகமும் ஆளுநர்களின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசியல் கட்சிகள், அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

எனினும், எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட குழப்பம் உட்பட மேலும் சில காரணங்களால் பல மாதங்களாக இழுத்தடிப்பு இடம்பெற்றுவருகின்றது.

அதேவேளை, அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading