Local

இருவேறு விபத்துகளில் மூவர் பரிதாப மரணம்!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ருவன்வெல்ல, துன்தொல பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அமிதிரிகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக அவிஸ்ஸாவெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தெவமோட்டே, ஆண்டிஅம்பளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 50 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்னர் பஸ்ஸில் இருந்து இறங்க முற்பட்டபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல மற்றும் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading