மேலும் மூன்று அமைச்சர்கள் ஜனாதிபதி முன் பதவியேற்பு!
புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.
அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:-
01) ரஞ்சித் மத்தும பண்டார – பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்.
02) பீ.ஹரிசன் – விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.
03) வசந்த சேனாநாயக்க – வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.






