Local

நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளுடன் இன்று கைது!

மல்வானைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகளுடன், நிதி அமைச்சின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் கைதுசெய்யப்பட்டார்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இன்று (29) முற்பகல் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 93 ரவைகள் கைப்பற்றப்பட்டன.

வாக்குமூலம் பெறப்பட்ட
பின் விடுவிக்கப்பட்டார்

பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த நபரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading