Lead NewsLocal

மஹிந்த, கோட்டாவை வரவேற்கும் வளைவு உடைந்து விழுந்தது! – கொழும்பில் மூவர் காயம்; வாகனங்கள் சேதம்

கொழும்பு, மஹரகம பிரதான வீதியில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை வரவேற்கும் பதாதை உடைந்து விழுந்ததில் பல வாகனங்கள் சேதமடைந்தமையுடன், மூவர் காயமடைந்தனர்.

‘மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்கின்றோம்’ என அமைக்கப்பட்டிருந்த பதாதையே நேற்று உடைந்து விழுந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோட்டாபய, தான் சூழலுக்கு நெருக்கமான தேர்தல் பிரசாரம் ஒன்றையே மேற்கொள்ளவுள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், சூழல் மற்றும் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பதாதைகள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading