LocalNorth

தமிழ் மக்கள் பேரவையின் பிரசுரத்தில் புலிச் சின்னம்! – வடக்கில் பெரும் பரபரப்பு

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவை எனக் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அந்தத் துண்டுப் பிரசுரத்துக்கும் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், இதனை இனந்தெரியாத எவரோ வெளியிட்டுள்ளனர் என்றும் தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.

தமிழ்மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கின்றது. இதற்குரிய அழைப்பைத் தமிழ் மக்கள் பேரவை ஏற்கனவே விடுத்திருக்கும் நிலையிலையே நேற்று இந்தப் பிரசுரமும் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஒக்ரோபர் 24 மாபெரும் எழுச்சி’ என்னும் தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் பிரசுரத்தில், தலைவன் வழியில் மக்கள் பேரவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம் எனப் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரவையின் முக்கியஸ்தரான வைத்தியர் பூ.லக்ஸ்மனின் படத்துடன் இந்தத் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் துண்டுப் பிரசுரத்தால் வடக்கில் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதனை அடுத்து இந்தப் பிரசுரத்துக்கும் தங்களுக்கும் எதவித தொடர்பும் இல்லை என தமிழ் மக்கள் பேரவை அறிவித்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading