Local

50 ரூபா கிடைத்தது வரலாற்று வெற்றி ! மார்தட்டுகிறார் திகா!!

வரலாற்றில் முதல்முறையாக வரவு செலவு திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு  50 ரூபா வீதம் சம்பளத்தை  உயர்த்தி  தமிழ் முற்போக்கு கூட்டணி  சாதனை படைத்துள்ளது என மலைநாட்டு புதியகிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம்  தெரிவித்தார்.

அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட உள்ள ஐம்பது ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம் (17.02.2019) இன்று அட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உறையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது .

தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள நிலுவை பணத்தை த.மு.கூட்டணி நிறுத்திவிட்டது என்று இப்போது சொல்கின்றார்களாம்.இப்படியானவர்களுக்கு எப்படி பதில் சொல்வது?

கடந்த காலத்தில் இடைக்கால கொடுப்பனவுஎன 3000 ரூபாயை பெற்று கொடுத்தோம். அப்போதும் இதனால் நிலுவைக்கு தடையேற்பட்டதாக தெரிவித்தனர்.

இம்முறை ஆயிரம் பெற்று தருவதாக சொல்லி அதற்கும்  குறைவாக சம்பளத்திற்கு கைச்சாத்திவிட்ட இரண்டு களவானிகள் மக்களை ஏமாற்றிவிட்டுள்ளனர்.

அத்துடன் பிரதமர் காரியாலயத்தில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டதால் ஐ.தே.க. ஏமாற்றிவிட்டது என மக்கள் குறைக் கூறுவதை ஏற்க முடியாத நிலையில் அரசுக்கு ஆதரவான த.மு.கூட்டணியின் ஆறு பேரும் அரசு தலையிட்டு 140 ரூபா சம்பளவுயர்வை பெற்றுதர வேண்டுமென கோரிக்கை விடுத்தோம்.இல்லையேல் அரசை விட்டு விலகுவதாக அழுத்தம் கொடுத்தோம்.

இதன் பயனாக நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் வரவு செலவு ஊடாக வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள வரலாற்றில் முதன் முறையாக வரவு செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் பலத்தை மக்கள் வழங்கியதால் இவ்விடயத்தில் த.மு.கூட்டணி சாதனை படைத்துள்ளது.

அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக அரசியல் பலத்தினால் பல சாதணைகளையும் படைத்துள்ளோம்.” என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading