LocalNorth

ரயிலுடன் மோதுண்டு சிதைவடைந்தது பஸ்!

யாழ்., தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிதைவடைந்துள்ளது மினி பஸ்.

இன்று காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றபோது மினி பஸ்ஸில் பயணிகள் எவரும் இருக்கவில்லை. பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த பயணிகளை ஏற்றும் மினி பஸ், ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த மினி பஸ் மோசமாகச் சேதமடைந்துள்ளது. பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading