Local

இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா உதவும்! – ரணிலிடம் ட்ரம்ப் வாக்குறுதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

நேற்றுமுன்தினம் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களுக்காக இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா உதவும் என்று இலங்கைப் பிரதமரிடம், அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த இலங்கைக்கு அமெரிக்கா உதவும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார் எனவும், தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் தமது அர்ப்பணிப்பைத் தலைவர்கள் மீள உறுதி செய்ய வேண்டும் என்று கோரினார் எனவும் வெள்ளை மாளிகையின் பிரதி ஊடகச் செயலர் ஹோகன் கிட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading