World

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவு கோளவில் 6.9 ஆக அது பதிவாகியுள்ளது என அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ தீவில், டாவோ நகரை மையமமாகக் கொண்டு இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் , நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌிவரவில்லை.

இந்தத் தகவலை பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் உறுதிப்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading