Local

வடக்குப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்றும் விடுமுறை!

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தினத்துக்கான பதில் பாடசாலை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading