Uncategorized

Twitter நிறுவனத்தில் மேலும் பலர் நீக்கம் !

 

Twitter நிறுவனத்தில் மேலும் குறைந்தது 50 பேர் வேலையை இழக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அக்டோபர் மாதம் எலோன் மஸ்க் Twitter நிறுவனத்தை வாங்கியதிலிருந்து 8ஆவது முறையாக ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

இம்முறை பல்வேறு பொறியியல் குழுக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

வருவாய்ச் சரிவை ஈடுகட்டுவதே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்று The Information ஊடக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளடக்கம் கையாளப்படும் நடைமுறைகள் குறித்து அக்கறைகள் எழுந்ததால் Twitter நிறுவனத்தின் விளம்பரங்கள் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

அதனால் வருவாய் சரிந்துவிட்டதாக மஸ்க் சென்ற நவம்பர் மாதம் கூறியிருந்தார்.

செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் Twitter ஊழியர் அணி சுமார் 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading