LocalNorth

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் வசமாக சிக்கினர்!!

வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் 750 கிராம் கேரளாக் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் போதை ஒழிப்புப் பிரிவினர் இணைந்து நேற்றிரவு மேற்கொண்ட நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியிலிருந்து நொச்சியாகம நோக்கிப் பயணித்த 31, 36 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரினையும் கைப்பற்றி தடுத்துத் வைத்துள்ளதாக போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading