Lead NewsLocal

பாதாள உலகக் கோஷ்டியினர் கிராண்ட்பாஸில் மோதல்! இருவர் வெட்டிக்கொலை!!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய பொது மயானத்துக்கு அருகில் வைத்து பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் வெட்டிப் படுகொலை செய்யயப்பட்டுள்ளனர்.

இரண்டு பாதாள உலகக் கோஷ்டியினருக்கு இடையில் இன்று ஏற்பட்ட மோதலின்போது இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர் ஆனமாலு ரங்க (வயது 39) மற்றும் 22 வயதுடைய இளைஞர் ஆகியோரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading