LocalNorth

தைப்பொங்கலில் வவுனியாவில் சோகம்! குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் மரணம்!!

வவுனியா – இரட்டைப் பெரியகுளம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தைப்பொங்கலையொட்டி இன்று (15) பகல் 6 இளைஞர்கள் குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளித்தில் இருந்த கல் ஒன்றின் மீது ஏறியபோது வழுக்கி விழுந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 இற்கும் 20 வயதிற்கும் உட்பட இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த ஒரு இளைஞனுடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகள் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading