Local

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது இலங்கை அரசு! – மாவை எம்.பி. பகிரங்கக் குற்றச்சாட்டு

“எங்களுடைய இனத்தின் உரிமை, சர்வதேச சட்டங்களின் படி, அரசியல் அமைப்பு சட்டங்களின் படி முழுமையாக நிறுவப்பட்டுள்ளது.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டாலும் தற்போது அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தவறி வருகின்றது எனவும் மாவை சேனாதிராஜா எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பிக்கு வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வரவேற்பு நிகழ்வு நேற்று பருத்தித்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading