Lead NewsLocal

தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கடும் கண்டனம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குல்களுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

நேற்று இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதியற்ற, பயங்கரவாத மற்றும் எந்தவொரு குற்றச் செயல்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றுமுன்தினம் 8 இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. அதேவேளை, நேற்று கொழும்பு – கொச்சிக்கடைப் பகுதியில் குண்டுடன் வாகனமொன்றும் வெடித்துச் சிதறியிருந்தது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவங்களில் சுமார் 300 பேர் வரையில் உயிரிழந்ததுடன், 500 பேர் வரையிலானோர் காயமடைந்துள்ளனர்.

மேலும், நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading