Lead NewsLocal

ஐ.தே.முவின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் முடிவு எதுவுமில்லை!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டமும் முடிவு எதுவுமின்றி நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் இன்று மாலை அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாக ஆராயப்பட்டன. எனினும், இதன்போது எந்த விடயத்திலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பை உள்ளடக்கிய அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து இறுதி முடிவு எடுக்க ஐ.தே.முவின் கட்சித் தலைவர்கள் நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் கூடுவது என இதன்போது முடிவாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading