Local

மைத்திரி மீது சொற்கணைகளைத் தொடுத்த எம்.பிக்களுக்கு பிரதியமைச்சுப் பதவி! – விரைவில் மூவர் பதவியேற்பர்

ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் மூவருக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

இதன்படி முஜிபூர் ரஹ்மான், ஆசுமாரசிங்க, மரிக்கார் ஆகிய மூவரும் விரைவில் பதவியேற்பார்கள் என்றும்,

நாளை (27) நடைபெறும் ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக 40 பேரை நியமிக்கமுடியும். அண்மையில் சிலருக்கு பதவிகள் வழங்கப்பட்டாலும் இழுபறி காரணமாக ஏனைய சிலருக்கு வழங்கப்படவில்லை.

அந்தப்பட்டியலிலேயே மேற்படி  மூவரின் பெயர்களும் உள்ளடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி நீக்கிய பின்னர், இவர்கள் மூவரும் வெளிப்படையாகவே ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தனர். ஜனாதிபதியின் மகளால் எழுதப்பட்ட நூல் குறித்தும் பலகோணங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading