Cinema

ரஜினியின் பேட்ட படத்தின் டிரெய்லர் 28இல் வெளியீடு!

ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் டிரெய்லர் நாளைமறுதினம் 28ஆம் திகதி வெளியிடப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார் நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை – அனிருத்.

பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது பேட்ட படம். இந்நிலையில், இதன் டிரெய்லர் நாளைமறுதினம் 28ஆம் திகதி வெளிவரவுள்ளது எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து சமீபத்தில் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் வழக்கப்பட்டது.

சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளின் பட்டியல் வெளியாகி இருக்கின்றது.

2 மணிநேரம் 51 நிமிடங்களுக்கு படக்குழு சமர்ப்பித்த படத்தில் சென்சார் குழு எந்த காட்சியையும் நீக்கவில்லை.

ஆனால், துப்பாக்கியால் சுடும் காட்சியின் நீளத்தை குறைத்துக்கொள்ள கூறியிருக்கின்றார்கள்.

இரத்தம் தெறிக்கும் சில வன்முறை காட்சிகளைக் கறுப்பாகக் காட்டச்சொல்லி அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

மேலும், பல இடங்களில் வார்த்தைகளுக்கு `பீப்’ சத்தம் கொடுக்கும்படியும் படக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜினியின் முந்தைய திரைப்படமான 2.0 மொத்தம் 147 நிமிடங்கள் நீளமுடையது. அதைவிட 25 நிமிடங்கள் அதிக நீளம் கொண்டிருக்கின்றது பேட்ட திரைப்படம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading