Local

மீண்டும் முறுகல்! பிரதமருடன் மு.கா. அவசர சந்திப்பு!!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று (08) நடைபெறவுள்ளது.

கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.

அதேவேளை, உப பிரதேச செலயக விவகாரத்தை மையப்படுத்தி இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதற்கு இராஜாங்க  அமைச்சர் எச்.எம்.எம்.ஹரில் தயாராகிவருகின்றார்.

இதனால், ஆளுந்தரப்புக்கும், முகாவுக்குமிடையிலான உறவில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இன்று பிரதமருடன் சந்திப்பு நடைபெறவுள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading