Lead NewsLocal

எதிர்கால கொள்கையைத் தெரிவிக்காது வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை! – சஜித் அணியின் வாயை அடைக்கப் புதுக்குண்டு போடுகின்றார் ரணில்

“நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்கால கொள்கைத் திட்டங்களை மக்களுக்கு அறிவிக்காமல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க போவதில்லை” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்புக்கான சகல திருத்தங்களும் முழுமையடைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி உட்பட கூட்டணியில் இணையவுள்ள சகல கட்சிகளினதும் அடையாளத்தை பாதுகாத்தே புதிய கூட்டணி அமைக்கப்படும். புதிய கூட்டணியின் கொள்கைத்திட்டம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ஆகிய இரண்டும் கைவசம் உள்ளது” என்றும் ரணில் அவர் குறிப்பிட்டார்.

அங்கும்புர அலவலதுவல வீதி மற்றும் அங்கும்புர பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றின் திறப்பு விழா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading