LocalUp Country

திகா உளறுகிறார் – வடிவேஸ் சுரேஸ் சீற்றம்!

” அமைச்சர் பழனி திகாம்பரம் நித்திரையிலிருந்து திடீரென விழித்தெழுந்தவர்போல் உளறுகிறார்.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை அவர் எங்கு இருந்தார்? – என்று பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் கேள்வி எழுப்பினார்.

பதுளையில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, கூட்டு ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வினா தொடுத்தார்.

” தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து என்மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் திகாம்பரத்துக்கு, இதுவிடயத்தில் எவ்வித பொறுப்பு இல்லையா?
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, தொண்டமான் கைகொடுத்ததுதான் அவருக்கு பெரும் பிரச்சினை. மற்றும்படி சம்பளத்துக்காக போராடவில்லை.
 
நுவரெலியா மாவட்டத்தில் திகா வெற்றிபெறுவாரா அல்லது தோல்வியடைவாரா என்பதை என்னால் தீர்மானிக்க முடியும். ஆனால், பதுளை மாவட்டத்தில் அவர் ஆதிக்கம் செலுத்த முடியாது. ” – என்றும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading