Entertainment

Varsha perera தனது முதல் தனிப் பராமரிப்பு கலைக் கண்காட்சியான “வர்ணா – காரி” யை அறிமுகம் செய்கிறார்

 

காட்சி கதையாளர் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணரான வர்ஷா பெரேரா தனது கற்பனை பயணத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணமயமான கலைப் படைப்புகளை “வர்ணா – காரி” எனும் அவரது முதல் தனிப்பட்ட கலைக் கண்காட்சியில் வெளியிடுகிறார். இந்த நிகழ்வு 2024 ஆம் ஆண்டு கார்த்திகை 30ம் திகதி மற்றும் டிசம்பர் 1ம் ஆகிய திகதி ஆகிய நாட்களில் கொழும்பின் லயனல் வெண்ட் ஹரோல்ட் பெரிஸ் கலா அரங்கில் நடைபெறவுள்ளது.

வர்ஷா தனது இந்தத் தொகுப்பின் முக்கிய நோக்கமாக மனித மனம், ஆழமான உணர்வுகள் மற்றும் நமக்குள் இணைக்கும் சக்திவாய்ந்த மனித உறவுகளின் சிக்கல்களை உணர முயற்சி செய்ததையே விளக்குகிறார்.
கொழும்பில் பிறந்து வளர்ந்த வர்ஷா சிறு வயதிலேயே ஓவியம் வரைதலில் ஆர்வம் கொண்டவராக காணப்பட்டதுடன் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி முடித்து, முகாமைத்துவ கணக்கியல் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிறைவேற்று கல்வியை முடித்துள்ளார்.

மார்க்கெட்டிங் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவரது பயணம் இலங்கை, மியான்மர், மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பல்வேறு பிராந்திய வழிநடத்தல் பொறுப்புகளை கொண்டதாகவும் காணப்பட்டது.
வர்ஷா தனது பயணம் குறித்து குறிப்பிடுகையில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்க்கை எனக்கு வெற்று கேன்வாஸ் ஒன்றை வழங்கியதுடன் அதை எனக்கு பிடித்த வண்ணங்களில் வரைந்து நான் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தேன். 2022 ஆம் ஆண்டில், ‘வர்ணா பை வர்~ஷா’ என்ற பெயரில் ஓவியம் வரைய நான் ஆரம்பித்ததுடன் இவ்வாறு வரைவது மிகவும் மனதிற்கு அமைதி தருவதாகவும் மனதிற்கு இதமளிப்பதாகவும் மனதை ஒருமுகப்படுத்துவதாகவும் காணப்படுகின்றது” என குறிப்பிட்டார்.

 

பாரிஸ் லூவ்ர் அரங்கில் உள்ள ஆர்ட் ~hப்பிங் எக்ஸ்போ, அபுதாபியில் மாசைன் டிசைன், கிரீசில் உலக கிறீட் போன்ற நிகழ்வுகளில் மற்றும் பல்வேறு கலைக் கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளமை இவரது திறமைக்கு ஒரு உதாரணமாக உள்ளது.

இந்த கண்காட்சியானது நுண்கலைகள், அலங்கார கலைகள், மற்றும் உருவப் படங்கள் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டதாக காணப்படுவதுடன் மண்டலா கோடுகள் மற்றும் வண்ணமயமான நிழல்கள் ஆகியவை மன உணர்ச்சிகளின் பரிமாணங்களை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான தொடர் ஒற்றுமையாக அமைந்துள்ளன.
கண்காட்சியின் இன்னுமொரு சிறப்பு அம்சமாக, விரிவாக்கிய உணர்ச்சிநிலை (யுரபஅநவெநன சுநயடவைல) வசதி காண்பிக்கப்படும். இதன் மூலம், கலைச் சிற்பங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் எந்த அறையுடன் பொருந்துமென்பதை நேரடியாக பார்வையிடலாம். மேலும், நிகழ்வின் போது நவீன மெய்நிகர் கலைக் கண்காட்சியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் கலை ஆர்வலர்கள் கலையுடன் நிகழ்நேரத்தில் எளிதாக தொடர்பு கொள்ள உதவும். மேலதிகமாக 10 ஓவியங்களின் NFTகளும் வெளியிடப்படும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading