Lead NewsLocal

வில்பத்து பிரச்சினையை பூதாகரமாக்கி முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட சதி!

வில்பத்து பிரச்சினையை பூதாகரமாக்கி முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு குழுவொன்று முயற்சிப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

வில்பத்து விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வேலுகுமார் எம்.பி. இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

“ நாட்டிலுள்ள இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படக்கூடாது. காடாக இருந்தாலும், சரணாலயமாக இருந்தாலும் அவை பாதுகாக்கப்படவேண்டும். எனவே, வனாந்தரத்திலிருந்து ஒருமரம் வெட்டப்பட்டால்கூட அதை கடுமையாக எதிர்ப்பவன் நான்.

நாட்டில் இன்று வில்பத்து சரணாலயம் குறித்து பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அப்பகுதியில் இடம்பெற்றுள்ள குடியேற்றங்கள் தொடர்பிலும் சமூகவலைத்தலங்களில் இனவாத கண்ணோட்டத்துடன் கருத்துகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுவருகின்றன.

2012 ஆம் ஆண்டிலிருந்தே இப்பிரச்சினை இருந்துவருகின்றது. எனினும், தேர்தலொன்று நெருங்கும்வேளைதான் அதை ஒருசிலர் கிளறுவதுடன், அதை வைத்து முஸ்லிம்மக்கள்மீது இனவாத செயற்பாட்டை கட்டவிழ்த்துவிடவும் முற்படுகின்றனர். சூழல்மீதான பற்று அல்ல. அரசியல் இலாபம் தேடுவதற்காகவே இனவாதக் குழுக்கள் திட்டமிட்ட அடிப்படையில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

எனவே, வில்பத்து விவகாரம் தொடர்பில் ஆராயப்படவேண்டும். அது குறித்து துறைசார் அமைச்சர் விளக்கமளிக்கவேண்டும்.’’ என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading