Sports

விராட் கோலியின் ஆட்டத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை! – கங்குலி புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஒருநாள் மற்றும் ரி – 20 போட்டியில் அசத்தி வருகிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

நேற்றைய விசாகப்பட்டினம் போட்டியில் 157 ஓட்டங்கள் குவித்தார். 81 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்து அதிகவேகமாக அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சாதனைப் படைத்துள்ள விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆட்டத்தை பற்றிக்கூற வார்த்தைகள் இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

விராட் கோலி குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், ‘‘விராட் கோலியின் ஆட்டத்தை வாழ்த்த எனக்கு வார்த்தைகளே இல்லை. விசாகப்பட்டினம் ஆடுகளம் வித்தியாசமானதாக இருந்தது. சூழ்நிலையிலும் மாறுபட்டிருந்தது. ஆனால், விராட் கோலி ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்விட்டார். விராட் கோலியின் சதம் மிகவும் சிறப்பான ஆட்டம்’’ – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading