Lead NewsLocal

படையினரின் போர்க்குற்ற ஆதாரங்கள் என் கைகளில்! – பொன்சேகா அதிரடி அறிவிப்பு

சில இராணுவ அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான சாட்சியங்கள் தன்னிடம் இருக்கின்றன என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“வெள்ளைக்கொடிச் சம்பவத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் என்னிடம் இருக்கின்றன. தேவையான நேரத்தில் அவற்றை முன்வைக்கத் தயாராக உள்ளேன்.

மேலும் இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட சட்டவிரோதமான நடவடிக்கைகள் சம்பந்தமான காணொ ளிகளும்என்னிடம் இருக்கின்றன. அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading