Lead NewsLocal

ஆட்சியமைக்க கூட்டமைப்பின் ஆதரவு எமக்குத் தேவையில்லை! – இப்படிக் கூறுகின்றார் பஸில்

“கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் அவர்களைத் தவிர்ந்த பல கட்சிகள் எங்களுடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து பேசி ஆட்சி அமைப்போம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு – கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டுவதில் நாட்டு மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்” எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading