Uncategorized

“We Must Change” பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள Darley Butler

 

 “We Must Change” என்ற தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றமை குறித்தும், Teepol, Bio Clean, Softny, மற்றும் Bubble All Out ஆகிய, மிகவும் நம்பிக்கைக்குரிய தனது நான்கு வீட்டுப்பாவனை வர்த்தகநாமங்களுக்கு மீள்நிரப்பக்கூடிய பாக்கெட்டுக்களை நாடெங்கிலும் அறிமுகப்படுத்துவது குறித்து E B Creasy & Co. PLC நிறுவனத்தின் விரைவாக விற்பனையாகின்ற நுகர்வோர் தயாரிப்புக்கள் பிரிவான Darley Butler அறிவித்துள்ளது. தற்போதுள்ள போத்தல்களை மீளப் பயன்படுத்துவதற்கு நுகர்வோரை ஊக்குவித்து, பிளாஸ்திக் பயன்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடிய மற்றும் விரிவுபடுத்தக்கூடிய வழியில் குறைக்க உதவுவதற்கு மீள்நிரப்பக்கூடிய பயன்பாட்டை நோக்கிய மாற்றத்திற்கு இம்முயற்சி அவர்களுக்கு ஊக்கமளிக்கின்றது.

 

பிளாஸ்திக் பயன்பாட்டால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகள் குறித்து நுகர்வோர் மத்தியில் கரிசனை அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதில் பொதியிடல் என்பது மிகவும் உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்றாக மாறியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மீள்நிரப்பக்கூடிய பாக்கெட்டுக்களுடன், நுகர்வோர் ஆரம்பத்தில் கொள்வனவு செய்கின்ற போத்தலை அதன் பின்னர் மீண்டும் நிரப்பி பயன்படுத்தும் வகையில் கொள்வனவுகளை மேற்கொள்ள இடமளித்து, அன்றாடம் வீடுகளில் இடம்பெறும் கொள்வனவுகளில் கட்டுறுதியான பிளாஸ்திக் பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவிப்பதே Darley Butler நிறுவனத்தின் நோக்கம். இந்த மாற்றத்தின் மூலமாக, வழக்கமாக இடம்பெறுகின்ற கட்டுறுதியான பிளாஸ்திக் போத்தல்களின் மீள்கொள்வனவுகளுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த பிளாஸ்திக் பயன்பாட்டை 70% வரை குறைக்க முடியுமென நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

 

மாற்றுவதற்குப் பதிலாக மீண்டும் நிரப்புதல் என்ற எளிமையான நடத்தை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு “We Must Change” பிரச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலும் சுப்பர்மார்க்கெட்டுக்கள் மற்றும் வழக்கமான பலசரக்கு கடைகளில் 2026 மார்ச் 6 முதல் இந்த மீள்நிரப்பல் கொள்வனவுகள் கிடைக்கப்பெறுவதற்கு இடமளித்துள்ள Darley Butler> தயாரிப்பின் பலன் அல்லது சௌகரியத்தில் எவ்விதமான சமரசமும் இன்றி, அன்றாட செயற்பாடுகளுக்கு தங்குதடையின்றி இடமளிக்கின்ற மாற்றுத் தீர்வாக மீள்நிரப்பக்கூடிய பாக்கெட்டுக்களை இடம்பெறச் செய்துள்ளது.

 

E B Creasy & Co. PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சஞ்சீவ குணவர்த்தன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “பிளாஸ்திக் பயன்பாட்டைக் குறைப்பது என்பது அவ்வப்போது மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு முயற்சியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தெரிவாகவோ மாத்திரம் இருக்க முடியாது. தயாரிப்புக்கள் பொதியிடல் செய்யப்பட்டு, விற்பனையாகி, மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகின்ற வழிமுறைகளில் அதனை உட்புகுத்த வேண்டும். ‘We Must Change’ பிரச்சாரம் மற்றும் Teepol, Bio Clean, Softny, மற்றும் Bubble All Out ஆகிய தயாரிப்புக்களுக்கு மீள்நிரப்பக்கூடிய பாக்கெட்டுக்களின் அறிமுகம் ஆகியவற்றுடன் இலங்கையில் நுகர்வோர் மத்தியில் பிளாஸ்திப் பயன்பாட்டைக் கணிசமான அளவில் குறைக்கும் அதேசமயம் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமங்களை அவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தும் வழிமுறையை நாம் இலகுபடுத்தியுள்ளோம். தேவைக்கேற்றவாறு போத்தலை மீளப்பயன்படுத்தி, மீள்நிரப்ப முடிகின்ற, சௌகரியமான மற்றும் இலகுவான பழக்கத்தை இது அடிப்படையாகக் கொண்டுள்ளமையால், நடைமுறைரீதியாக இதனை இலகுவாக முன்னெடுக்க முடிவதுடன், இதனை விரைவாக விரிவுபடுத்தவும் முடியும்.”

 

வழக்கமான வீட்டுப்பாவனைக்கு உதவும் வகையில் மீள்நிரப்பக்கூடிய பாக்கெட்டுக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நான்கு பிரதான தயாரிப்பு வகைகளுக்கு இம்முயற்சியை ஆரம்பித்துள்ளதன் மூலமாக நிலைபேற்றியலை விரிவுபடுத்தி, பொறுப்புமிக்க தெரிவுகளை குறிப்பிட்ட பிரிவுக்கு உரியதாகவன்றி, அன்றாட நுகர்வோர் நடத்தையில் உட்பொதிக்க வேண்டும் என்ற Darley Butler நிறுவனத்தின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

சுத்தப்படுத்தல், சலவை, மற்றும் வீட்டுப் பராமரிப்பு வழக்கங்களில் மீள்நிரப்பலுக்கு முதலிடம் அளிக்கின்ற நடத்தை மாற்றத்தை ஊக்குவித்து, மீள்நிரப்பல் பயன்பாட்டை சரியான முறையில் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், விற்பனை நிலையங்களில் இது குறித்து தகவல் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ளவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பில் பரிணமித்து வருகின்ற முன்னுரிமைகள் மற்றும் நுகர்வோர் எதிர்பார்ப்புக்களுக்கு அமைவாக தனது தயாரிப்பு வரிசையில் பொதியிடல் சார்ந்த புத்தாக்கங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை Darley Butler மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

அன்றாடம் நாம் மேற்கொள்ளும் சிறு சிறு தெரிவுகள் ஒன்றுசேர்ந்து அர்த்தமுள்ள விளைவை ஏற்படுத்தும் அதேசமயம், சிக்கனம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இத்தீர்வின் மூலமாக வெளிப்படையான மாற்றத்தில் பங்கேற்குமாறு இலங்கையில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும்  “We Must Change” மூலமாக Darley Butler நிறுவனம் அழைப்பு விடுக்கின்றது.

 

Darley Butler நிறுவனம் தொடர்பான விபரங்கள்

E B Creasy & Co. PLC நிறுவனத்தின் விரைவாக விற்பனையாகின்ற நுகர்வோர் தயாரிப்புக்கள் பிரிவான Darley Butler ஆனது Teepol, Bio Clean, Softny, மற்றும் Bubble All Out உள்ளிட்ட நம்பிக்கைமிக்க வீட்டுப்பாவனை வர்த்தகநாமங்களை வழங்கி வருகின்றது. தரமான தயாரிப்புக்களை வழங்கும் அதேசமயம், புத்தாக்கம், செயற்பாட்டு மேம்பாடு, மற்றும் நிலைபேற்றியல் மிக்க பொதியிடல் தீர்வுகள் ஆகியவற்றினூடாக பொறுப்புணர்வுமிக்க வணிக நடைமுறைகளை மேம்படுத்துவதில் இந்நிறுவனம் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading