Sports

இலங்கை அணியை வீழ்த்தி வென்றது தென்னாபிரிக்கா!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜெகனர்ஸ் போர்க்கில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்து.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 60 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன் ஓசத பெர்னாண்டோ 49 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்கா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதன்படி தென்னாபிரிக்கா அணிக்கு 232 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய 38.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியீட்டுள்ளது.

தென்னாபிரிக்கா அணி சார்பாக டு பிளஸிஸ் ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களைப் பெற்றதுடன் டி கெக் 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading