World

X தளத்தில் Like ஐ அழுத்தினால் டொலர் ($I)அனுப்பலாம்..!!

சமூக வலைத்தள அமைப்பான ‘X’ தளத்தில் உள்ள ‘Like’ பட்டனை நீண்ட நேரம் அழுத்திப் பிடிப்பதன் மூலம், குறிப்பிட்டப் பதிவை வெளியிட்டவருக்கு ஒரு அமெரிக்க டொலர் ($1) அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

‘X Money’ எனும் பணப் பரிவர்த்தனை சேவை மூலமாக இந்த புதிய அம்சம் செயற்படுத்தப்படவுள்ளது.

இணையதளத்தில் உள்ளடக்கம் மற்றும் தகவல்களைப் பகிரும் ‘Content Creators’களுக்குப் பயனர்கள் மிக எளிதாக நிதியுதவி (Tip) மற்றும் ஆதரவை வழங்க ஊக்களிக்கும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியானது முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளப் பதிவுகளுக்கான ஆதரவை நிதி வடிவில் எளிதாக வழங்கும் வகையில் இந்த மாற்றம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading