Local

ரயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை!

அனுராதபுரம், புளியங்குளம் பகுதியில் 17 வயதுடைய இளைஞர் ஒருவரும், 14 வயதுடைய சிறுமி ஒருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்று காலை அனுராதபுரத்தில் இருந்து மதவாச்சி நோக்கிப் பயணித்த ரயிலில் பாய்ந்தே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சிறுமி படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரம் தொடர்பில் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading