EastLocal

யானை தாக்கி இளம் பெண் உயிரிழப்பு! அதிர்ச்சியில் பொலிஸ் அதிகாரி மரணம்!!

மட்டக்களப்பு – திகிலிவெட்டையில், காட்டு யானை தாக்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் அதிர்ச்சியில் மரணமானார்.

திகிலிவெட்டை என்னும் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 4 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பெண்ணின் சடலத்தை மீட்கச் சென்றனர்.

சடலத்தைப் பார்வையிட்ட நிதிய துரைலாகே லக்ஸ்மன் குமார ராஜபக்ச (வயது 37) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகஸ்தர் மயங்கி வீழ்ந்தார்.

இதனையடுத்து சக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவரும் அவரை மீட்டு அருகிலுள்ள சந்திவெளிப் பிரதேச வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும், அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading