வைத்தியரின் வெறியாட்டத்தால் தாதி தற்கொலை! மனைவியும் உடந்தை!!
ஹட்டன், டன்பார் வீதியிலுள் தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றிவந்த யுவதியொருவர் தற்கொலை செய்துள்ள சம்பவமானது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.
வைத்திய அதிகாரியின் தவறான நடத்தை மற்றும் அவரது மனைவியின் கொடுமை ஆகியவற்றை தாங்கிக்கொள்ள முடியாததாலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக குறித்த யுவதி மரணவாக்குமூலம் பதிவுசெய்துவிட்டே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வட்டகொடை – யொக்ஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய முருகையா சாந்தினி என்பவரே கடந்த 27 ஆம் திகதி இரவு மருத்துவமனைக்குள் தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.
மரணம் தொடர்பில் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து குறித்த மருத்துவமனையில் வைத்தியரை பொலிஸார், விசாரணைக்குட்படுத்திய போதிலும், முறையான விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வைத்திய அதிகாரி தவறான முறையில் நடந்த கொள்ள முயற்சித்ததாகவும், வைத்திய அதிகாரியின் மனைவியும் கொடுமைப்படுத்தியதாகவும்,
இதனாலையே தான் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு இறக்க போவதாகவும் என்னை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் எனது இறப்புக்கு வேறு யாரும் காரணம் அல்ல. வைத்தியரும் அவரது மனைவியும் தான் என்று குரல் பதிவு செய்த ஒலி கோவை ஒன்று உறவினர்களிடம் உள்ளது.
அந்த குரல் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு, 29.01.2019 அன்று அவரின் இறுதி கிரியைகள் மேற்படி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, உயிரிழந்த யுவதியின் பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட வைத்திய அதிகாரி கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கின்றனர்.
