Local

அடை மழை தொடரும் – மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிப்பு!

நாட்டில் அடுத்த சில நாட்களில் குறிப்பாக இன்றும் நாளையும் நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்தியஇ சப்ரகமுவ ஊவா வடமத்திய மற்றும் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்தியஇ சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் குறிப்pபடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் மேலும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழைவுடன் கூடிய காலநிலையையடுத்து மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கண்டி நுவரெலிய மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading