Local

ஆற்றில் மூழ்கி மூவர் மரணம்!

நாவலப்பிட்டி மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

நாவலப்பிட்டி மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது என நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

குறித்த இளைஞரின் வீட்டுக்கு காலிப் பகுதியில் இருந்து வந்திருந்த உறவினர்களோடு மகாவலி கங்கைக்கு இரண்டு இளைஞர்களும் ஒரு சிறுமியும் நீராடச் சென்றுற்றனர்.

இதன்போது நீரில் மூன்று பேரும் நீரில் அடித்துச் செல்வதைக் கண்ட பொதுமக்கள் காலிப் பகுதியைச் சேர்ந்த சிறுமியையும் இளைஞரையும் உயிருடன் மீட்டெடுத்துள்ளனர்.

நாவலப்பிட்டி பலலேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ரஞ்சித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இதுதவிர இங்கிரிய பிரதேசத்தில் மாவக் ஓயாவில் மூழ்கியதில் 21 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading