LocalNorth

ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கோப்பாயில் மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் இட ம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களின் தொடர்புடைய ஆவாக் குழு உறுப்பினர்கள் மூவரைப் கோப்பாய் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்துள்ளனர்.

கோப்பாய் பகுதியில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு ஆவா குழுவினர் வந்துள்ளனர். அவர்களைக் கண்டு அங்கு நின்ற இருந்த இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். ஆனால், ஆவா குழுவினர் அங்கு நின்றவர்களைத் துரத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது இளைஞர் ஒருவர் கிணறு ஒன்றுக்குள் குதித்து மறைந்து தப்பிக்க முயன்றுள்ளார் இதனை அவதானித்த வாள்வெட்டுக் குழுவினர் கிணற்றுக்குள் மறைந்து இருப்பவர் மீது கிணற்றுக்குள் வைத்தே கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இவ்வாறு ஆவா குழுவினர் கிணற்றுக்குள் வைத்துத் தாக்குவதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

அச்சமயம் சம்பவம் நடைபெறும் வீதியால் கோப்பாய் பொலிஸார் வந்தமையால் சம்பவம் தொடர்பில் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த இளைஞரைக் காப்பாற்றியமையுடன் தாக்குதல் நடத்திய இளைஞர்களில் மூவரைக் கைதுசெய்தனர். ஆனாலும், அங்கு தாக்குதல் நடத்திய ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிகமாக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading