Sports

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 311 ஓட்டங்கள் சேர்ப்பு!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்துள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, 2 ஆம் நாள் முடிவில், 2 விக்கட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதனால் இலங்கை அணியை விட நியூசிலாந்து அணி 29 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது. அவ்வணி சார்பில் டொம் லேய்தம் அட்டமிழக்காமல் 121 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களையும், ஜீத் ராவல் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பந்து வீச்சில் லஹுரு குமார மற்றும் தனஞ்சய டீ சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இதற்கு முன்னதாக இலங்கை அணி, தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது 282 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading