Local

எங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல! – மஹிந்த சண்டித்தனம்

பலாத்காரமாக அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் அரசைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால், எங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வீரகெட்டிய – கசாகல, புராண விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று (நேற்று) நாடாளுமன்றம் நாடக மேடை போன்று காணப்பட்டது. நாங்கள் அரசைக் கொண்டுசெல்வோம். விட்டுச் செல்ல மாட்டோம். அதை நான் தௌிவாகக் கூறுகின்றேன். சட்டத்திற்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றினால், விட்டுச்செல்ல நாங்கள் தயார். ஆனால், பலாத்காரமாக அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் எங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல. ஜனாதிபதிக்கு மாத்திரமே அவ்வாறு செயற்படுத்த முடியும். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை வேறு ஒருவரும் எடுத்துக்கொள்ள முடியாது. அரசமைப்புக்கு அமைய அந்த அதிகாரத்தை நீதிமன்றத்தால் கூடப் பறிக்க முடியாது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading