Local

ஐ.தே.கவின் 12 எம்.பிக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! விளக்கம் கோரவும் முடிவு

இடைக்கால கணக்கறிக்கைமீதான வாக்கெடுப்பின்போது அதில் கலந்துகொள்ளாத ஐக்கிய  தேசிய முன்னணியின் 12 எம்.பிக்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டின் முதல்காலாண்டுக்கான கணக்கறிக்கை கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 102 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஜே.வி.பி. எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
மேற்படி வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னியின் அனைத்து எம்.பிக்களும் கலந்துகொள்ளவேண்டும் என பிரதமரால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், 12 எம்.பிக்கள் பங்கேற்கவில்லை.
இதற்கான காரணம் குறித்தே மேற்படி எம்.பிக்களிடம் விளக்கம்கோரப்படவுள்ளது என ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading